districts

img

மே தின நூற்றாண்டு கொண்டாட்டம் மெரினாவில் நடத்த ஏற்பாடு

சென்னை, ஏப். 21- சென்னையில் சிங்கார வேலர் 1921 ஆம் ஆண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாடி செங்கொடியை ஏற்றினார்.  அதன் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகை யில் பாரதி புத்தகாலயம், அரசு போக்குவரத்து  ஊழியர்  சம்மேளனம் சார்பில் உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி மெரினாவில் நூற்றாண்டு விழா கொண் டாட்டத்தையும், புத்தக வாசிப்பு இயக்கத்தையும் நடத்த உள்ளன. அதையொட்டி ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 4  மணிக்கு ‘சிங்கார வேலர்’  என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற தலைப்பில் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், ‘ஏகாதியபத் தியம்’ என்ற தலைப்பில் பொருளதார பேராசியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ‘குடும்பம் அரசு தனிச் சொத்து’  என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்செல்வன், ‘கற்பனாவாத சோசலிசம், விஞ்ஞான சோசலிசம்’ என்ற தலைப்பில் சிபிஐ தேசிய நிர்வாக குழு உறுப்பினர்  சி.மகேந்திரன், ‘அரசும் புரட்சியும்’ என்ற தலைப்பில்  சிஐடியு தலைவர் அ.சவுந் தரராசன் ஆகியோர் காணொளி வாயிலாக  உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி 19 மையங் களில் சுமார் 1,500 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிபிஎம், சிஐடியு, காம்ரேட் டாக்கீஸ், தீக்கதிர்,  போக்குவரத்து சம்மேளனம்,  பாரதி டிவி யூ டியூப் சேனல்களிலும் நேரடியாக  ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்த  கூட்டம் போக்குவரத்து சம்மேளன பொதுச்செய லாளர் ஆறுமுக நயினார் தலைமையில் சென்னையில் வியாழனன்று (ஏப். 21) நடைபெற்றது. இதில் பாரதி புத்தகாலயம் மேலாளர் நாகராஜ், சமூக வலைதள பொறுப்பாளர்கள் இரா.சிந்தன், சுதிர் ராஜா, சிஐடியு மாநிலச் செயலாளர் கோபி குமார் ஆகியோர் பேசினர்.