tamilnadu

img

6 ஆண்டு ‘சாதனை’ வீடியோ வெளியிட்டு பாஜக கொண்டாட்டம்.....

புதுதில்லி:
கொரோனாவால் நாடு பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. வாகன ஏற்பாடுகள் செய்து தரப்படாததால், நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். பசியிலும்பட்டினியிலும் எதிர்காலம் என்னாகுமோ? என்று கோடிக்கணக்கான மக்கள் கவலைரேகை படிய உறைந்து நிற்கின்றனர்.இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக,தங்களது 6 ஆண்டு ஆட்சியின் ‘சாதனை’ வீடியோவை வெளியிட்டு, மக்களை அவமானப்படுத்தியுள்ளது.மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்து மே 30 அன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி, மொத்தம்9 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பை, பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், மோடி வெற்றிபெற்றபோது, அவர் கூட்டத்தைப் பார்த்து கையசைக்கும் ஒரு படத்துடன், ‘ஸ்வச் பாரத்’, ‘மேக் இன் இந்தியா’, ஆயுஷ்மான் பாரத் ஆகிய பழைய திட்டங்களை மீண்டும் மீண்டும் சாதனைகளாகக் காட்டியுள்ளது.கடந்த ஓராண்டில் மக்கள் நலத் திட்டங்கள் என்று எதையும் குறிப்பிடாத பாஜகவினர், மத அடிப்படையில் கொண்டுவந் துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீ
ருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு வழங்கிய உரிமைகளை ரத்துசெய்தது; முத்தலாக் தடை, ராமர் கோயில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபோன்றவற்றையே சாதனைகளாக குறிப் பிட்டுள்ளனர். “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக அரசு இப்போது விரைவாககொரோனா கொடூரத்திலும் ‘ஓட்டு’ அரசியல் 6 ஆண்டு ‘சாதனை’ வீடியோ வெளியிட்டு பாஜக கொண்டாட்டம் செயல்பட்டு வருகிறது” என்றும் அந்த வீடியோவில்குரல் ஒன்றை ஒலிக்க விட்டுள்ளது.ஆனால், 4 மாதங்களாக இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மட்டும் எந்தப் பதிவும் இடம்பெறவில்லை.பாஜக-வின் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கொரோனாவால் லட்சக்கணக்கான இந்திய மக்கள்துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது, பாஜகவுக்கு எவ்வாறு இப்படியெல்லாம் கொண் டாட்ட மனநிலை வருகிறது? என்று பலரும்கேள்விகளை தெரிவித்துள்ளனர்.