மாட்ரிட்
200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து வந்தாலும், கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
தற்போதைய நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள சில நாடுகளில் கொரோனா வைரஸ் மையம் கொண்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் சேதாரத்தை சந்தித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்பெயின் தான். அங்கு கடந்த 12 மணிநேரத்தில் அங்கு 2242 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு பலி எண்ணிக்கை 18,000 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 33 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 539. ஆசியக் கண்டத்தில் கொரோனா அதிக வேகத்தில் பரவி வருவதால் உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.