tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது.... 

நியூயார்க் 
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என இந்த மூன்று கண்டங்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பலி எண்ணிக்கை என இரண்டிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.  

இந்நிலையில் உலகம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 757 பேர். ஆறுதல் செய்தியாக 5 லட்சத்து 58 ஆயிரத்து 158 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 58 ஆயிரத்து 158 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.