tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வங்காளதேசத்தில் ஆற்றில்  படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 32 பேர்  உயி ரிழந்தனர்.

உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு கோவை மாவட்டத்தைப்போல் இழப்பீடு வழங்கக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தினர் குடை பிடித்தபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் உள்ள தனி யார் மருந்து கம்பெனி யில் ரசாயன வாயு கசிந்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும், தங் கள் நாட்டு அதிநவீன போர்க்கப்பல்களுடன், கூட்டு கடற் படைப் பயிற்சியை ரகசியமாக நடத்தி முடித்துள்ளன. மூன்று வாரமாக திட்ட மிடப்பட்டு வந்த இந்த பயிற்சி, இந்தியப் பெருங்கடற் பகுதியில் நடந்துள்ளது. 

இந்தியா - சீனா எல்லை பதற் றம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாது காப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்ப ருடன் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரான்சிடம் .59 ஆயிரம் கோடி செலவில், 36 ரபேல் போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதில், முதற்கட்ட மாக ஜூலை 27 அன்று ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்ப டைக்கப்படுகின்றன.

உயிரி ஆயுதங்களை எதிர் கொள்ளும் வகையில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்காக, அந்நாட்டில் விஷே சமாக கிருமி நாசினி ஒன்று தயாரிக்கப்  பட்டு வருகிறது. இதனை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதற்காக ‘டெரா நோவல்’ என்ற இஸ்ரேலிய நிறுவ னத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.