தில்லி
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா மையம் கொண்டு அங்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா பரவல் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு உலக அட்டவணையில் தற்போது 4-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்கு செல்கிறது. ரஷ்யாவில் இதுவரை 6.74 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 6.49 லட்சம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவு. அதாவது 7 ஆயிரத்துக்குள் தான். ஆனால் இந்தியாவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்து மேல். பரிசோதனைகளும் அதிகமாக எடுக்கப்பட்டதால் விரைவில் ரஷ்யாவை இந்தியாவை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறும் நிலை உருவாகியுள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (28.90 லட்சம்) தொடர்ந்து முதலிடத்திலும், பிரேசில் (15.43 லட்சம்) 2-வது இடத்தில் உள்ளது.
பலி எணிக்கையை பொறுத்தவரை அமெரிக்கா (1.32 லட்சம்), பிரேசில் (63 ஆயிரம்), பிரிட்டன் (44 ஆயிரம்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா (18 ஆயிரம்) 8-வது இடத்தில் உள்ளது.