tamilnadu

img

மனிதநேயத்திற்கான 1 வது குல்பென்கியன் பரிசை வென்ற இளம் பெண் கிரேட்டா தன்பர்க்

‘HOW DARE YOU’ என்ற வார்த்தையின் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அந்த சிறுமி கிரேட்டா தன்பர்க்.

இவர் 17 வயதான ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை ஆர்வலர்   கிரேட்டா  டின்டின் எலியோனோரா எர்ன்மன் தன்பர்க் , காலூஸ்டே குல்பென்கியன் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட மனிதகுலத்திற்கான தொடக்க   குல்பென்கியன் பரிசினை பெரும்  முதல் நபர். 1 மில்லியன் யுரோ ( 1.15 மில்லியன் டாலர்) தொகை மதிப்புள்ள இந்த விருது, காலநிலை மாற்றத்திற்கான காரணத்திற்காக இளைய தலைமுறையினரை அணிதிரட்டும் நபர்களை அங்கிகரிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.

குறிப்பு:

   இந்த விருதுக்காக  உலகம் முழுவதும் 46 இல் இருந்து 136 வேட்பாளர்கள்(79 நிறுவனங்கள், 57 நபர்கள்) தேர்வு செய்யப்பட்டார்.

நன்கொடை ;

1. கிரேட்டா தன்பர்க் தாம் பெரும்  பரிசிலிருந்து 1 மில்லியன் யுரோவை காலநிலை நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உதவ பணிபுரியும் அமைப்புகளுக்கும்      நன்கொடையாக வழங்குகிறார்.

2. அமேசான் மழைக்காடுகளின் மக்கள்தொகையில் கோவிட் -19 ஐ சமாளிக்க ,பிரேசில் தலைமையிலான SOS அமசோனியா பிரச்சாரத்திற்கு அவர் 1,00,000  யுரோ கொடுக்கிறார் மற்றும் 
சுற்றுச்சூழலுக்காக பணியாற்றும் ஒரு குழுவான ஸ்டாப் ஈகோசைட் அறக்கட்டளைக்கு 1,00,000 கொடுக்கிறார் என்று சொல்வதன் மூலம் கிரேட்டா தன்பர்க்  சுற்றுச்சூழல் ஆர்வலர்  மட்டுமல்ல மனிதநேயம் கொண்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஐநா பருவநிலை மாநாட்டிற்க்கு வந்த அமேரிக்க அதிபர் ட்ரம்பை முறைத்துப் பார்த்தக்கொண்டிருந்த வீடியோ வைரல் ஆனதும்,அமெரிக்க அதிபர் போட்ட டுவீட்டை  கலாய்த்து பதிலடி கொடுத்த இளம் பெண் கிரேட்டா தன்பர்க் என்பது குறிப்பிடத்தக்கது.