டொடோமா
கிழக்கு ஆப்பிரிகா நாடான தான்சானியாவின் முன்னாள் ஜனாபதியான பெஞ்சமின் எம்.காபா 1995 முதல் 2005-ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். இவரை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல சமாதான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முக்கியமானது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான சமாதான முயற்சி ஆகும். இந்த கூட்டமைப்புக்கு தலைவராக இருந்த பெஞ்சமின் எம்.காபா கடந்த சில நாட்களாக உடல்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 81 வயதில் உயிரிழந்தார்.
பெஞ்சமின் மரணத்தை ஒட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தற்போதைய ஜனாதிபதி மாக்ஃபுலி அறிவித்துள்ளதார்.