tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தெலுங்கானாவில் நீர்மின் நிலை யத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியுள்ளனர்.

இரண்டு நாட்கள் தொடர் விடு முறை என்பதால் சென்னை யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84. 26க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78. 86க்கும் விற்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரம் வீடியோக்களை நீக்கியுள்ளோம் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி யின் விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள தாக பிசிசிஐ அமைப்பு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு பிரேத பரிசோதனை செய்த மும்பை கூப்பர் மருத்துவமனையைச் சேர்ந்த 5 டாக்டர்களுக்கு தொடர்ந்து போன் மூலமாக மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பையடுத்து கடந்த நிதியாண்டில் இந்திய நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி ரூ.21,515.4 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.