இன்று 24 ஆகஸ்ட் ,2020 யமுனா ஆற்றின் நீர்மட்டம் 204.38 மீட்டராக உயர்ந்தது. இது மிகவும் ஆபத்தானது எனவும் ,யமுனை நதியின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள வர வாய்ப்புள்ளதாகவும், அதை சமாளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என டெல்லியின் நீர் மந்திரி சத்யேந்தர் ஜெயின் கூறினார்.
ஹரியானாவின் யமுனநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணையில் இருந்து காலை 8 மணிக்கு 5,883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.ஆற்றின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 204.38 மீட்டரில் பதிவாகிய நிலையில் ,அதன் அபாயமான ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.