புதுதில்லி:
இனிவரும் காலங்களில் தேர்தல் இல்லாமலேயே ஆட்சிக்கு வரும் அளவிற்கு பாஜக வலுவாக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான ராம் மாதவ் கூறியுள்ளார்.தீவிர ஆர்எஸ்எஸ்-காரரான ராம் மாதவ், தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போதுதான் மேற்கண்டவாறு அவர் பேசியுள்ளார்.“கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முழுக்க முழுக்க மோடியைச் சுற்றியே இருந்தது. நாட்டின் பிரபலமான தலைவராக மோடி விளங்குகிறார். உலகின் பல நாடுகளில் தலைமை பலவீனத்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆட்சி கவிழ்ந்துள்ளது. ஆனால், வலுவான தலைமை அமையும்போது, அதற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உண்டாகும். தற்போது மோடிக்கு அந்தப் பெயர் உள்ளது. தேர்தல் இல்லாமலேயே ஆட்சியமைக்கும் அளவிற்கு பாஜக வலுவாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.