ஜபல்பூர்:
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில்,முஸ்லிம் ஊழியர் கொண்டுவந்த உணவைஉண்ண மாட்டேன், என்று இந்துத்துவா பேர்வழி ஒருவர் மல்லுக் கட்டியதும், ‘உணவுக்கு மதமில்லை என்று ‘சொமாட்டோ’ நிறுவனம் அதற்கு பதிலடி கொடுத்ததும், சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
மேலும், உணவை மறுத்துத் திருப்பிஅனுப்பிய அமித் சுக்லா என்ற நபருக்குகண்டனங்களும், மறுபுறத்தில் ‘சொமாட்டோ’ நிறுவனத்திற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.இதனிடையே, அமித் சுக்லா, சொமாட்டோ விவகாரம் தொடர்பாக, செய்தித் தொலைக்காட்சியில் விவாதத்திற்கு அழைக்கப்பட்ட ஒருவர், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அதாவது, முஸ்லிம் என்பதற்காகவே ஒருவரை வெறுக்கும் போக்கு குறித்து,‘நியூஸ் 24’ தொலைக்காட்சி விவாதத் திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க, ‘ஹம் ஹிந்து’ என்ற அமைப்பைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் அழைக்கப்பட்டுள்ளார். அவரும் கலந்து கொண் டுள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென ‘காலித்’என்ற ‘நியூஸ் 24’ ஊடக நெறியாளரைக் கண்டதும், இரண்டு கைகளாலும் அஜய்கௌதம் கண்களை மூடிக்கொண்டுள் ளார். அதாவது, காலித் ஒரு இஸ்லாமியர்என்றும், எனவே, டி.வி. தொகுப்பாளராகவே இருந்தாலும், அவரைப் பார்த்துபேச மாட்டேன் என்றும் கூறி, அஜய்கௌதம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். உணவைத் திருப்பிய அனுப்பிய, அமித் சுக்லாவைக் காட்டிலும், இது மோசமானது என்பதால், அஜயின் செயல் புதியசர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியை ‘நியூஸ் 24 ’ஒளிபரப்பவில்லை. எனினும், நடந்த சம்பவத்தை மறுநாள் தனது ட்விட்டர் பக் கத்தில் வெளியிட்டுக் கண்டித்துள்ளது.“நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளித்து மேடை அளிக்கஅனுமதிக்க முடியாது. அஜய் கௌதமைஇனிமேல் அழைப்பதில்லை என முடிவுசெய்துள்ளோம்” என்று ‘நியூஸ் 24’ தொலைக்காட்சியின் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத் கூறியுள்ளார்.