tamilnadu

img

திருக்கோயில் தொலைக்காட்சிக்காக கோயில் நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு

சென்னை:
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தொடங்க உள்ள திருக்கோயில் தொலைக் காட்சியில் ஒளிபரப்ப சிறப்பு வீடியோக்களை அனுப்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட ‘திருக்கோயில்’ எனும் பெயரில் ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கான முன் னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருகின் றன. இதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ் வொரு முக்கியமான நிகழ்வுகளும் ஒளிப் பதிவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங் மற்றும் வர்ணனைகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில் களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்திட அறிவுறுத்தப்பட்டு சில திருக் கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் ஆணையர் அலுவலகத்தில்பெறப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு செய் யப்பட்ட (வீடியோ) ஆவணப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு சில திருக் கோயில்களின் ஆவணப்படங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன.

தற்பொழுது சிறப்பான வீடியோ ஒளிப் பதிவுகளைக் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது. திருக்கோயில் தொலைக் காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய் திட அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படு வதால் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வீடியோகிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் திருக்கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.