புதுதில்லி:
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகரால், பொருளாதார ஆய்வறிக்கை (Economic survey)வெளியிடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வ றிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வியாழனன்று, நிதியமைச்சர்நிர்மலா சீதாராமனிடம் தாக்கல் செய் தார்.இந்த அறிக்கையில், பணி ஓய்வுபெறுவதற்கான வயதை அதிகரிப்பது,பள்ளிகளை இழுத்து மூடுவது உள் ளிட்ட ஆபத்தான பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதையும், சிறுவர்கள் எண்ணிக்கை குறை வதையும் காரணம்காட்டி, இந்த பரிந்துரைகளை, தலைமை பொருளாதார ஆலோசகர் வழங்கியுள்ளார்.“2011-ல் 60 வயதுக்கு மேற்பட் டோர், 104.2 மில்லியன்தான் இருந்த னர். ஆனால், 2041 ஆம் ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட்ட வயதுள்ளோர் எண்ணிக்கை 239.4 மில்லியன் என்ற அளவில் இருக்கும். எனவே, இந்தபிரச்சனையை எதிர்கொள்ள, சுகா தாரப் பணிகளில் முதலீடுகள் தேவை.
படிப்படியாக, ஓய்வூதிய வயதை அதிகரிக்கவும் திட்டம் தேவை. அதேபோல, குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தின் காரணமாக, 19 வயதுக்கு உட்பட்டோரின் மக்கள் தொகை விகிதம் 2041 ஆம் ஆண்டில் 25 சதவிகிதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பள்ளி களில் காலியிடங்கள் உருவாகும் என்பதால், பள்ளிக்கூடங்களை இணைப்பதும் கட்டாயமாகும்” என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.