tamilnadu

img

இந்த வெற்றியை நாங்களே  எதிர்பார்க்கவில்லை

புதுதில்லி:
மக்களவைத் தேர்தலில் பாஜக இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று பாஜக-வின் மூத்த தலைவரும், நாக்பூரில் மீண்டும் வெற்றி பெற்றிருப்பவருமான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:17-ஆவது மக்களவைத் தேர்தலில் நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு அதிக இடங்களைப் பெற்றுள்ளோம். தெலுங்கானா போன்ற மாநிலத்திலேயே நாங்கள் 4 இடங்களைப் பிடித்திருக்கிறோம். கடந்த முறை இங்கு ஒரு இடத்தைக் கூட நாங்கள் பெறவில்லை.இப்போது நாங்கள் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டோம். அங்கும் நாங்கள் பெரிய வெற்றியைப் பெறுவோம். இவ்வாறு கட்காரி கூறியுள்ளார்.