tamilnadu

img

கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல

நாக்பூர்:

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த கணிப்புக்களை நம்ப வேண்டாம் என்று பாஜக தலைவர்களே தற்போது கூறத்துவங்கியுள்ளனர்.


“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் எப்போதுமே துல்லியமாக இருப்பதில்லை. அது சரியான கணிப்பும் அல்ல.கடந்த 1999 முதல் பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் தவறாகி இருக்கின்றன” என்று பாஜக மூத்த தலைவரும், தற்போதைய குடியரசுத் துணைத்தலைவருமான வெங்கையா நாயுடு ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், “கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாகத்தான் அமைந்துள்ளன; என்றாலும், கருத்துக்கணிப்புகளே இறுதி முடிவு அல்ல” என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்காரியும் தெரிவித்துள்ளார்.