புதுதில்லி:
தில்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை 4-ஆவது நாளாக முடங்கியது. இதனால் கோபமடைந்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, “எதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண் டும் என நீங்கள் (எம்.பி.க்கள்) எனக்கு டிக்டேட் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது ஒன்றும்சந்தைக் கடை அல்ல, நாடாளுமன்றம். முழக் கங்கள் எழுப்புவதை அனுமதிக்க முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள்” என்று ஆவேசம் அடைந்துள்ளார்.