புதுதில்லி:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19 அன்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புவனேஷ்வர் கலிதா, பிரேம் சந்த் குப்தா ஆகியோர் ஐந்தாவது முறையும், திருச்சி சிவா, கேசவ் ராவ், பிஸ்வஜீத் டைமாரி, பரிமல் நத்வானி ஆகியோர் நான்காவது முறையும், சரத் பவார், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் இரண்டாவது முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தினேஷ்திரிவேதி, நபம் ரபியா ஆகியோர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேவகவுடா, சிபு சோரன் ஆகியோர் இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.