tamilnadu

img

இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள வந்த உகாண்டா நாட்டின் தேர்தல் குழு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள உகாண்டா நாட்டின் தேர்தல் குழு இந்தியா வந்துள்ளது.


உகாண்டா நாட்டின் தேர்தலுக்கான துணைத்தலைவர் ஆசிபா பி லுபெகா, தேர்தல் ஆணையர்கள் கிகோசி சபகலா முஸ்தபா மற்றும் அகாஃவே ஜஸ்டின் மற்றும் மூத்த தேர்தல் அதிகாரி மாட்சிகோ இம்மானுவேல் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று இந்தியா வந்துள்ளது. அக்குழு இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரு நகரங்களில் உள்ள வாக்குச்சாவடி நான்கு வாக்குச்சாவடிகளை பார்வையிட்டது.


உகாண்டா நாட்டுக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியான SVEEP குறித்து ஆய்வு செய்தது. தேர்தல் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சிகள், வாக்காளர் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்ததாக SVEEP நிகழ்ச்சிக்கான இந்திய அதிகாரி ராஜிவ் தியாகி கூறியுள்ளார். மேலும், முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் வாக்குச்சாவடியையும், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடியையும் உகாண்டா குழு பார்வையிட்டது.