புதுதில்லி:
நாட்டில் வாகன விற்பனை குறையவில்லை என்பதற்கு, போக்குவரத்து நெரிசலே உதாரணம் என்று பாஜக-வின் அதிபுத்திசாலி எம்.பி. ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.இந்தியாவில் ஓராண்டுக்கும் மேலாகவே, வாகனங்கள் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. டாடாமோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மகிந்திரா, மாருதி சுசுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களே தங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்குபோயிருக்கின்றன. இது நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான வேலையிழப்புக்களையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து, எதிர்க்கட்சிகள் வியாழனன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விவாதத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. வீரேந்திர சிங் மஸ்த் ஊடே புகுந்துள்ளார்.அவர், “நாட்டையும் அரசாங்கத் தையும் அவதூறு செய்வதற்காகவே, ஆட்டோ மொபைல் துறை மந்தமாகி விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதாகவும், ஆட்டோமொபைல் விற்பனையில் சரிவு ஏற்பட்டால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் ஏற்படப் போகிறது; வாகன விற்பனை குறைய வில்லை என்பதற்கு அடிக்கடி ‘டிராபிக் ஜாம்’ ஆவது ஒன்றே போதாதா?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் வெங்காய விலை உயர்வு குறித்த குற்றச்சாட்டுக்கும் வீரேந்திர சிங்பதிலளித்துள்ளார். அதில், வெங்காயம்விலை உயரவில்லை என்று ஒரேயடியாக சாதித்துள்ள வீரேந்திர சிங், “எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எத்தனை லோடு வெங்காயம் வேண்டும்? 25 ரூபாய் விலையில் நான் தருகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.இதனைக் கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நாம் நாடாளுமன்றத்தில்தான் இருக்கிறோமா? சரியான நபரிடம்தான்விவாதம் செய்து கொண்டிருக்கி றோமா? என்று தங்களைத் தாங்களே நொந்து கொண்டுள்ளன.