tamilnadu

img

நாளை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது

ஸ்ரீநகர்,அக்.29- அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்  ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது.  மத்திய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்தை தான்தோன்றித்தனமாக ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது.  இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்டோபர் 31 ஆம் தேதி  முதல் ஜம்மு - காஷ்மீர்  மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறும்  என்றும் அதன் தலைநகரங்கள் ஸ்ரீநகர் மற்றும் லேவில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு லெப்டினன்ட்-கவர்னர்கள் பதவியேற்பு மூலம் இந்த செயல்முறை தொடங்கும் என்றும் மூத்த அதிகாரி ஒரவர் தெரிவித்தார்.

ஜம்மு  காஷ்மீரின் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி கீதா மிட்டல் முதலில் ஸ்ரீநகரில் ஜி.சி.முர்முவுக்கு லெப்டினன்ட்-கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து லேவில்  ராதா கிருஷ்ணா மஹூருக்கு  பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஜம்மு- காஷ்மீர்  மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்,  ஜம்மு-காஷ்மீர்  சட்டமன்ற  தொகுதிகளின் எண்ணிக்கை 107 லிருந்து 114 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திற்கு  சட்டமன்றம் கிடை யாது. லெப்டினன்ட்- கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும்.