tamilnadu

img

தில்லி வீட்டைக் காலி செய்ய  கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு

புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முடக்கப்பட்டுள்ள தில்லி ஜோர் பாக் வீட்டை காலி செய்யும்படி, சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடுகள் பெற தடையில்லாச் சான்று வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு  அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின்மகன் தொடர்புடைய நிறுவனம் உதவியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் 76 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. அவற்றில்,கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாய் நளினி பெயரில் தில்லி ஜோர் பாக்கில் உள்ள வீடும் முடக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் அந்த வீட்டை கார்த்தி சிதம்பரம் காலி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்துகார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி உத்தர விட்டுள்ளது.