tamilnadu

img

பி.இ.பட்டதாரிகள் மூவரில் ஒருவருக்கு வேலை இல்லை....

புதுதில்லி:
இந்தியாவிலுள்ள பொறியியல் பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் தங்களின் வேலை வாய்ப்பு பற்றி கவலைப்படுவதாக “பிரிட்ஜ்லாப்ஸ் சொல்யூஷன்ஸ்” நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்டோர், இந்த ஆய்வில் கலந்து கொண்டு பதிலளித்த நிலையில், அவர்களில் 27 சதவிகிதம் பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய ஊதிய தொகுப்புடன் பணியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
76 சதவிகிதம் பேர் தங்கள் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம் இருப்பதாக பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த முகாம்கள் மூலம் ஐந்தில் இரண்டு பேருக்கு குறைவாகவே வேலை வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். 78.64 சதவிகித மாணவர்கள் எந்த வேலையும் பெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தல் செயல்முறைகளை நிறுத்தி விட்டன, பலரை பணியிலிருந்து நீக்கியுள்ளன. இந்தப் பின்னணியிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.