புதுதில்லி, மார்ச் 7- யெஸ் பேங்க் தகர்ந்திருப்பது, ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆத ரவு கூட்டுக் களவாணி முதலாளித்து வக்கொள்கை மிக மோசமான நிலையை எட்டியிருப்பதைக் காட்டு கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் செயல்பட்டுவந்த தனி யார் வங்கியான யெஸ் பேங்க் தகர்ந்தி ருப்பது நாட்டில் தனியார் வங்கிகள் செயல்படும் விதம் குறித்தும், அவற் றைச் சரியானமுறையில் செயல்படும் விதத்தில் காலத்தே தலையிட வேண் டிய இந்திய ரிசர்வ் வங்கியின் தோல் வியைக் குறித்தும் சங்கடத்திற்குள் ளாக் கும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. யெஸ் பேங்க் நிகழ்வு கார்ப்பரேட் ஆதரவு கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தின் மிக மோசமான எடுத்துக்காட்டாகும். வங்கியின் பதிவேடுகளிலிருந்து, வங்கியின் கடன் கணக்கு 2014 மார்ச் மாதத்தில் 55,633 கோடி ரூபாயாக இருந்தது, 2019 மார்ச்சில் 2,41,999 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது எனக் காட்டுகிறது. ஆளும் கட்சியின ருக்கு வேண்டிய கார்ப்பரேட்களுக்கு வங்கி அள்ளித் தந்திருக்கிறது. இவ் வாறு அள்ளித்தந்துள்ள கார்ப்ப ரேட்டுகளில் அனில் அம்பானி போன்றவர்களின் நிதி நிலைமை மிக நிலையற்றதாக இருந்தபோதி லும், வங்கி இதுபோன்ற நபர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி சரிசெய்யவில்லை
இந்த வங்கியின் தடுமாற்றமான நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரிய வந்திருந்தபோதி லும், அது காலத்தே செயல்பட்டு இதனைச் சரிசெய்ய முன்வர வில்லை. இதன் மூலம் இதில் டெபா சிட் செய்திருந்தவர்களின் நலன்க ளுக்குக் கேடு விளைவித்துள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் கூட்டுக் களவாணி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்து இந்தியப் பொருளாதாரத்தை நாச மாக்கி வருவதை இனியும் மறைத் திட முடியாது. இப்போது இந்த வங்கியின் பங்கு களில் 49 சதவீதத்தை வாங்கிக் கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி பணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு லாபம் என்றால் தனியார்மயம் என் றும், நஷ்டம் என்றால் தேசியமயம் என்றும் மாற முடியாது. வங்கிகளில் டெபாசிட் செய்கிறவர்களின் நலன் களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். யெஸ் பேங்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக திரும்பப்பெற முடியாது என்று இந் திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள உத்தரவை செல்லுபடியாகாது என்று உடனடியாக அறிவித்திட வேண் டும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு கூறியுள்ளது. (ந.நி.)