tamilnadu

img

உ.பி. தேர்தலுக்கு முன்னதாகவே கோயிலை கட்டியாக வேண்டும்..

புதுதில்லி:
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்குள், அயோத்தியில் ராமர்கோயில் கட்டி முடித்து விட வேண்டும்என்பதில், அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் தீவிரத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உச்சநீதிமன்றம் சொன்னபடி கோயில் கட்டும் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் அறக்கட்டளையை மத்திய அரசு விரைவில் ஏற்படுத்த உள்ள நிலையில், அனேகமாக,2020-ஆம் ஆண்டு மகர சங்கராந்தி தினத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு அடிக்கல் நாட்டப்படும் பட்சத்தில், உத்தரப் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும்சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே ராமர் கோயில் கட்டி முடிக்கப் பட வேண்டும் என்ற அவசரத்துடன் அந்த மாநிலத்தின் சாமியார் முதல்வர்ஆதித்யநாத் இருப்பதாக கூறப்படுகிறது. ராமர் கோயிலை வைத்து, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கட்டடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா உருவாக்கிய வடிவமைப்பு அடிப்படையில் கோயில்கட்டப்பட வேண்டும் என விஸ்வ ஹிந்துபரிஷத் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தியுள்ளார்.விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்முன்னாள் தலைவர் அசோக் சிங்கால்,அயோத்தியில் கட்டப்போகும் ராமர்கோயிலின் அமைப்பை வடிவமைக்க 1989-ஆம் ஆண்டே சோம்புராவை நியமித்தார். அவருடைய வடிவமைப்பு நாடு முழுக்க உள்ள பக்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, அந்த வடிவமைப்பிலேயே புதிய கோயில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அலோக் குமார் கூறியுள்ளார்.