tamilnadu

img

சிஏஏவிற்கு எதிராக மேகாலயாவில் போராட்டம்

ஷில்லாங், மார்ச் 1- மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மேகாலயா மாநிலம் கிழக்கு காஸி மலைப்பகுதி மாவட்டத்தில் அமைந்துள்ளது இச்சமதி கிராமம்.  இங்கு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மற்றும் இன்டர்லைன் பெர்மிட் (ஐ.எல்.பி.) தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. இதில் காஸி மாணவர் சங்க உறுப்பினர்களும், மலைவாழ் அல்லாத மக்களும் கலந்து கொண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே  மோதல் நிகழ்ந்தது. இதில் ஒருவர் கொலை செய்யப் பட்டார். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.  6 மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.