மதச்சார்பின்மையும் மனிதமும் கொல்லப்பட்டு வருகின்ற நம் நாட்டில் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இறையாண்மையை சூறையா டும் மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு சேவகம் செய்வது போல் செயல்படும் மாநில அரசிற்கு எதிராகவும் பெண்கள் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது நாள் வரையிலும் பிரியாணியின் சுவையினுள்ளும், புர்காவின் இருண்ட உலகிற்குள்ளும் தன் திறமை மற்றும் வாழ்க்கை வட்டத்தை சுருக்கி வைத்தி ருந்த சாமானியப் பெண்கள் அனைவரும் இன்று ஒருமித்த குரலால் குடியுரிமைச் சட்டம் வேண்டாம் என கைகளை உயர்த்தி கோஷமிடுவது இன்று அவர்களின் புதிய அடையா ளமாய் - பின்வாங்காமல் போராடுவது என்பதாய் மாறி யுள்ளது.
வீடும் குடும்பமுமே முக்கியம் என வீடுகளில் அடைந்து கிடந்த நம் பெண்கள் வீதிகளில் இறங்க என்ன காரணமாக இருக்கும் ?? வேறேதுமல்ல.. அதற்கும் காரணம் இதுவே தான் ! குடும்பநலன் !! குடியுரிமை இல்லாமல் தன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று அவர்களை யோசிக்க வைத்துள்ளது. பிள்ளை களின் கல்வி என்னவாகும் என்பதை யோசிக்க வைத்துள் ளது. அகதியாகப் போகும் தன் குடும்பத்தை யோசிக்க வைத்துள்ளது.
முன்னதாக மோடி மற்றும் அமித்ஷாவால் கொண்டு வரப்பட்ட சி.ஏ.ஏ வின் அங்கங்கள் முதலில் அவர்களை குழப்பமடையத்தான் செய்தன. இவர்கள் சிந்தனையைத் தூண்ட வைத்த முதல் நிகழ்வாக இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ விற்கு எதிராய்ப் போராடிய மாணவ, மாணவிகளின் மீது தொடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் அமைந்தது. அதாவது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமான பல்கலைக்கழக மான ஜாமியா மிலியாவில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராய் ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் போராடிய அப்பாவி மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக வன்முறையே இவர்களை யோசிக்க வைத்ததற்கான முதல் காரணமாகும். இந்த வன்முறைக்கு எதிராய் பின்னர் இந்திய மாணவர் சங்கம் உட்பட பல்வேறு வெகுஜன அமைப்புகளால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இவ்வாறு நடத்திய போராட்டங்களில் முக்கியமானது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் ஆகும். குறிப்பாக அங்கு தொடர்ந்த போராட்டத்தை முன் னெடுத்து வந்த ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷி கோஷ், திடமான இரும்பு ஆயுதத்தால் தாக்கப் பட்டார். போராடும் சாதாரண மாணவர்களுக்கே இந் நிலைமையெனில் அகதியாய் வாழ நேரிட்டால் தன்குழந் தையின் கதி என்னவாகும் என்பதை இப்போராட்டங்கள் தாய்மார்களையும், பெண்களையும் யோசிக்க வைத்தன. குறிப்பாக, இரும்பு ஆயுதமா அல்லது இரும்புதிட மன உறுதியா என ஆங்கிலப் பத்திரிகையில் ஆட்சியாளர்க ளைக் கேள்வி கேட்க வைத்தும் மண்டை உடைபட்டுக்கூட அடுத்த நாள் போராட்டக் களத்தில் ஒரு அங்குலம் கூடப் பின் வாங்கப்போவதில்லை என்றும் வீர கோஷமிட்ட அய்ஷி கோஷின் குரல் இன்று அவர்களை வீதிக்கு அழைத்து வந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 35 இடங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கெதரான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. இச்சட்டத்தால் இஸ்லாமியர்கள் ஒருவருக் கும் பாதிப்பில்லை என நாடாளுமன்றத்தில் வாதாடும் அமித்ஷா மற்றும் மோடியினரும் இதனால் சிறு பான்மையினருக்கு என்ன பாதிப்பு என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரிடம் கொந்தளிக்கும் முதல்வர் எடப்பாடி யும் உயிரைக் கொடுத்துப் போராடி வரும் மக்களிடம் அதையே அவர்களின் போராட்டக் களத்தில் வந்து கேட்பதற்கு தயக்கம் ஏன்?
அதற்கு மாறாக நம் ஆட்சியாளர்களின் செயல்கள் பாசிசப் போக்கிற்கு அப்பட்டமாக வழிவகுக்கின்றன. கலவ ரக்காரர்களுக்கு காசு வாங்கிய அடிமையாய்ச் செயல்படு கிறது. உதாரணத்திற்கு ஜே.என்.யு கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை விட்டுவிட்டுப் போராடி அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போராட்டக் காரர்களின் மீது வழக்கினைத் தொடுத்துள்ளது. மேலும் போராடுபவர்களை அப்புறப்படுத்த 3 நாள் தான் அவகாசம் என திமிரிய கபில் மிஸ்ராவிற்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனக் கருதி 11 பேர் தனிப்படை கொண்ட 24 மணி நேர ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே நம் ஆட்சி யாளர்களின் கருணை முகமாகும்.
எது எப்படியாக இருந்தாலும் சமையலறையிலிருந்தும், குடும்பக் கட்டிற்குள் இருந்தும் வீட்டின் தேவைக்காக மட்டும் வெளியே வந்த பெண்களும், மாணவிகளும் இன்று நாட்டின் தேவைக்காக வெளியே வந்துள்ளனர். இவர்க ளின் தலைமையிலான இப்போராட்டம் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, வீட்டில் சௌகரியமாக பாதுகாப்பான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி மக்களையும் யோசிக்க வைத்துள்ளது. எங்களிலில்லை இந்து ரத்தம், எங்களி லில்லை கிறிஸ்து ரத்தம், எங்களிலில்லை முஸ்லிம் ரத்தம் எனப் போராடும் அவர்களின் மன உறுதியில் பாசிசவாதி களின் துப்பாக்கியின் தோட்டாச் சத்தங்கள் மறைந்து காணாமல் போகும்.
கட்டுரையாளர் : மாநில ஒருங்கிணைப்பாளர்,
இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் உப குழு