tamilnadu

img

பாசிச சக்திகள் தலைதூக்கிய காலம் - பி.ராமமூர்த்தி

1934ம் ஆண்டு ஐரோ ப்பாவில் பாசிச சக்திகள் தலை தூக்கி வந்த காலம். பாசிசத்தை எதிர்த்துப் போராடி அதை ஒழிக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளுடைய, முற் போக்காளர்களுடைய முதற்கடமை என உணர்த்தி வந்த காலம். எனவே 1935ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கம்யூ னிஸ்ட் அகிலத்தின் மாநாட்டில் ஜார்ஜ் டிமிட்ரோவ் பாசி சத்திற்கெதிரான போராட்டம் பற்றிய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அது ஏகமனதாக ஏற்கப்பட்டது. அதில் ஹிட்லர், முசோலினி அதிகாரத்திற்கு வந்த பின்னால், எவ்வாறு பாசிச சக்திகள் பலமடைந்து வரு கின்றன என்பது எடுத்துக்கூறப்பட்டு, அது பரவாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், ஐரோப்பிய கம்யூ னிஸ்ட் கட்சிகள் பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட முன்னணியை உருவாக்க வேண்டுமென்ற வழிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் ஹிட்லரின் ஆதிக்க விஸ்தரிப்பைத் தடுப்ப தற்கு தயாராக இருக்கக்கூடிய எந்தவொரு ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசோடும், ராணுவக் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள சோவியத் யூனியன் தயாராக இருந்தது. எனவே ஐரோப்பிய கம்யூனிஸ்டுக் கட்சிகள் அத்தகைய தொரு கூட்டு ஒப்பந்தத்திற்குப் பாடுபட்டன.

இதே சமயத்தில்தான் ஸ்பெயின் நாட்டின் கம்யூ னிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும் வேறு சில ஜன நாயகவாதிகளும் ஒன்றுபட்டு ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையி டங்களைப் பிடித்து, ‘மக்கள் முன்னணி’ அரசாங்கத்தை அமைத்தனர். இந்த மக்கள் முன்னணி அரசு சில முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தது. குறிப்பாக ‘லாட்டி பண்ட்டா’ என்று சொல்லக்கூடிய பெரிய நிலப் பிரபுக்களின் எஸ்டேட்டுகளை உடைத்து நிலச்சீர்திருத் தம் செய்தது. இதைக்கண்ட அந்நாட்டின் பிற்போக்குச் சக்திகள், நிலப்பிரபுக்கள், கத்தோலிக்க சர்ச் ஆகியவை, ராணு வத்தில் ஒரு ஜெனரலாக இருந்த பிராங்கோ என்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதி மூலம், ராணுவத்தின் ஒரு பகுதியை உடைத்து, மக்கள் முன்னணி அரசாங்கம் மீது யுத்தம் தொடுத்தனர்; உள்நாட்டு யுத்தத்தை உரு வாக்கினர். பிராங்கோவின் இந்த பிற்போக்குக் கலகப் படையினருக்கு ஹிட்லரும், முசோலினியும் ஆயுதங்க ளை அனுப்பி உதவினார்கள். மக்கள் முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்து, பாசிசத்தை முறியடிக்க வேண்டுமென்ற எண்ணம் படைத்த பல்வேறு தேசங்களிலிருந்த கம்யூனிஸ்டுக ளும், இதர முற்போக்காளர்களும் ஒரு சர்வதேச தொண் டர்படையை அமைத்தனர். இந்தத் தொண்டர் படையி னர் ஸ்பெயினுக்குச் சென்று பிராங்கோவின் கலவரப் படைக்கெதிராக ஆயுதங்தாங்கி போராடினர்.

அச்சமயத்தில் இங்கிலாந்திற்குச் சென்றிருந்த ஜவ ஹர்லால் நேரு, மக்கள் முன்னணி அரசுக்கு ஆதர வாக, ஸ்பெயினில் உள்ள பார்சலோனா என்ற இடத்திற் குப் போய், உள்நாட்டு யுத்தத்தைப் பார்த்து இந்தியா விற்குத் திரும்பி வந்தார். திரும்பி வந்தவுடன் லக்னோ வில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசுகையில், ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிக்குறிப்பிட்டு இந்திய தேசிய காங்கிரஸ், மக்கள் முன்னணி அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென்று வற் புறுத்தினார். ‘ஸ்பானிஷ் உதவி நிதி’ வசூலிக்க வேண்டு மென்று கூறினார். காங்கிரசின் மூத்த தலைவர்கள் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இதில் அக்கறை எடுத்து உதவி நிதி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் சில ஆயிரம் ரூபாய்கள் வசூல் செய்தோம். நான் சென்னையில் பல இடங்களுக்கும் சென்று பணவசூல் செய்து வந்தேன். முன்பின் தெரியாத பலரிடம் சென்று ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிப் பேசி பண வசூல் செய்துவந்தேன். இதை ஒரு அரசி யல் பிரச்சாரமாகவே செய்துவந்தோம். தம்புச்செட்டி தெரு வில், பல கடைக்காரர்களிடம் போய் பணவசூல் செய்து வரும் பொழுது அங்கிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அண்ட் கம்பெனிக்குள்ளும் நுழைந்து, அக்கம்பெனியின் உரிமையாளரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை பார்க்க வேண்டுமென்று கூறி ஒரு சிறிய தாளில் என் பெயரை எழுதி அனுப்பினேன். கிருஷ்ணமாச்சாரியும் உள்ளே வரும்படி அழைத்தார். அவரிடமும் நான் ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிக் கூறிப் பணம்கேட்டேன்.

டி.டி.கிருஷ்ணமாச்சாரி அச்சமயத்தில் சென்னையில் பிரபல வர்த்தகர்களுள் ஒருவர். அரசியலுக்கு சம்பந்தப் படாதவர். நான் கூறிய விஷயங்கள் அவருக்குப் புதுமை யாக இருந்தன. “என்ன தம்பி, எங்கேயோ ஸ்பெயினில் சண்டை போடுகிறார்கள்; நீங்க ஏன் அதற்கு பணம் வசூலிக்க வேண்டும்? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்” என்ற பல கேள்விகள் கேட்டார். நான் அவருக்கு பாசிசத்தைப் பற்றியும், இது பரவி னால் எப்படி ஜனநாயகம் அழிக்கப்படும் என்பதைப் பற்றி யும் நீண்ட நேரம் விளக்கினேன். இறுதியில் அவர் திருப்தி யடைந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’ எழுதிக் கொடுத்தார். அத்தோடு அவர் வீட்டு விலாசத்தைக் கொடுத்து, அவரைச் சந்திக்கும்படி கூறினார். இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசும் படியும் கேட்டுக் கொண்டார். ஸ்பானிஷ் உதவி நிதிக்கு தமிழ்நாட்டில் மிக அதிகம் கொடுத்தவர் டி.டி.கே. மட்டுமே. பின்னர் டி.டி.கேவை நான் அடிக்கடி சந்தித்துப் பேசு வது வழக்கமாகிவிட்டது. அச்சமயத்தில் இங்கிலாந்தில் விக்டர் கோலன் ஒரு “இடதுசாரி புத்தக கிளப்” என்ற ஒரு பதிப்பகத்தை  நடத்தி வந்தார். பாசிச எதிர்ப்பு, சோவி யத் ஆதரவு, இடதுசாரி ஆதரவு புத்தகங்களை இந்த கிளப் வெளியிட்டு வந்தது. அதில் உறுப்பினராக சேர்பவர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் சிறப்புப் புத்தகம் ஒன்றை குறை வான விலைக்கு அனுப்புவார்கள். இந்தக் கிளப்பில் சேரும்படி டி.டி.கே.யிடம் கூறி, அவர் அதில் உறுப்பினரா னார். ஜீவா, காட்டே, பி.எஸ்.ஆர். ஆகியோருக்கு டி.டி. கே யை அறிமுகப்படுத்தி வைத்தேன்.