tamilnadu

img

மோடியைத் தோற்கடிப்பதே எதிர்க்கட்சிகளின் முதல் பணி! ராகுல் காந்தி திட்டவட்டம்

புதுதில்லி, ஏப்.2- எதிர்க்கட்சிகளின் தற்போதைய முதல் பணி நரேந்திர மோடியைத் தோற்கடிப்பது மட்டும்தான் எனவும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சாத்தியமான ஒன்றுதான் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முதற்கட்ட தலையாயபணி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே ஆகும். ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வேண்டியது முதலில் அவசியம். இந்தியாவின் சமூக அமைப்பு மற்றும் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களை மோடி அரசு சீரழிப்பதை நாம் முதலில் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதாவது வளர்ச்சி மேம் படவும், பொருளாதாரம் முன்னோக்கிச் செல்லவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அநீதியையும் சமத்துவமின்மையையும் களையவும் நாம் பாஜகவை தோற்கடித்தாக வேண்டும்.மோடிக்கு எதிராக இந் திய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். நாட்டின் நலனுக்காக பாஜக தோற்கடிக்கப் பட வேண்டும் என்ற உணர்வில் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்திலும் ஒரு புரிதல் உள்ளது. எனவே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி நிச்சயமாகச் சாத்தியமாகும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.