புதுதில்லி:
விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தை மத்திய அரசுதொடரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:மிகப்பெரிய அளவிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக (megaFree Trade Agreement) இருக்கக்கூடிய, மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP-Regional Comprehensive Economic Partnership) தொடர்பாக, ஆசியன் (ASEAN), சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, கையெழுத்தாவதற்காகக் கடைசிநிமிடப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாஜக அரசாங்கம், நாட்டிலுள்ள மாநிலஅரசுகளுக்கோ, நாடாளுமன்றத்திற்கோ எதுவும் தெரிவிக்காமல் ரகசியமான முறையிலும், ஜனநாயக விரோதமான முறையிலும் இந்தஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆட்சேபகரமானதாகும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுமானால் இது நாட்டிலுள்ள உற்பத்தி மற்றும் விவசாயத்தைக் கடுமையான அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும். நாட்டின் தற்போதைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை மேலும் விரிவாக்கிடும். இதன்காரணமாக நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மிகவும் ஆழமான முறையில் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் அவசரப்பட்டு கையெழுத்திடக்கூடாது என்றும், இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்ப்பித்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வரவிருக்கும் நவம்பர் 4 அன்று பல்வேறு விவசாய அமைப்புகள் தில்லியில் நடத்தவுள்ள அகில இந்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் தார்மீக ஆதரவை விரிவாக்கிக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.