tamilnadu

img

பொருளாதாரத் தீர்வைத் தருகிறோம் என்பது பாஜகவின் பம்மாத்து ....காஷ்மீருக்குத் தேவை அரசியல் நீதியே!

“காஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்கள்” (The many faces of kashmiri nationalism) என்ற நூலின் ஆசிரியர் பத்திரிகையாளர் நந்திதா ஹக்சர்.

காஷ்மீர் தொழிற்சங்கங்கள், ஷேக் அப்துல்லாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என ஜம்மு -காஷ்மீர் அரசியல் வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, இரண்டு மனிதர்களின் வாழ்வியல் வழியாகப் பேசும் புத்தகம் இது.
காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் பிரிவு 370-ஐ, மத்திய பாஜக அரசு செயலிழக்கச் செய்துள்ள நிலையில், காஷ்மீர் நிலத்தின் வரலாறு அறிந்த எழுத்தாளர் நந்திதா ஹக்சரை, ‘ஆனந்த விகடன்’ ஏடு பேட்டி கண்டுள்ளது. அதில், ஹக்சரின் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டு அவைகளிலும் மொத்தம் 49 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் பல மசோதாக்கள் (காஷ்மீர் தொடர்பான பிரிவு 370(1) குடியரசுத் தலைவரின் முடிவாக அறிவிக்கப்பட்டது உட்பட), வாக்கெடுப்பு இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஜனநாயகச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?பதில்: பல ஆண்டுக்கால போராட்டத்தின் பலன், ஒரே நாளில் துடைத்தெறியப்படுகிறது. ஆனால், இதில் பாஜக என்னும் ஒரு கட்சியை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது. இதற்கான காரணம்இன்னும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. சமூகத்தில், பொருளாதார அடிப்படையில், அரசியலில் என அனைத்திலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் (Institutionalized inequalitids) புகுந்துள்ளன. இதற்கிடையே, ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று கேட்பீர்களேயானால், அது இருண்டுபோய்தான் இருக்கிறது.

‘அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான இத்தகைய அணுகுமுறைதான் சிக்கலே தவிர, மற்றபடி தற்போதுகொண்டுவந்திருக்கும் மாற்றம், காஷ்மீருக்கு நன்மை செய்யக் கூடியதே’ என்கிறார்கள் சிலர். முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்புச் சட்டங்களின் மீதான மசோதாக்கள், எவ்வித முன்விவாதமும் இன்றி நிறைவேற்றப்படலாம் என்பதே அச்சத்துக்குரிய விஷயம்தான். இந்த மாற்றத்துக்கு மிகக்குறைந்த அளவிலான எதிர்ப்பே இருக்கிறது என்பது இன்னும் அச்ச
மூட்டக்கூடியதாக இருக்கிறது.அரசியலமைப்புச் சட்டங்களின் மீதான மசோதாக்கள், எவ்வித முன்விவாதமும் இன்றி நிறைவேற்றப்படலாம் என்பதே அச்சத்துக்குரிய விஷயம்தான்.கேள்வி: அப்படியென்றால், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அரசு, பிரிவு 370(1) உபயோகித்திருப்பது சரியான முடிவில்லை என்கிறீர்களா?சரியான முடிவா இல்லையா என் கிற விவாதத்தைக் கடந்து, இது சட்டத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும்திணிக்கப்பட்ட துஷ்பிரயோக அரசியல் (Political abuse).
ஜம்மு-காஷ்மீர், சட்டமன்றத்துடன்கூடிய யூனியன் பிரதேசமாகஇருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த ஜம்மு-வுக்கான சட்டமன்றம் என்னவாகும், அந்தக் கட்சிகள் இந்தச்சூழலை எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள்?
நீதிமன்றம்தான் தற்போது கண் முன் புலப்படும் ஒரே வழி. பாஜக-வை சட்டரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் எதிர்கொள்ளலாம். நீதிமன்றங்களில் தீர்வு எட்டப்படாத நிலையில், இருக்கவே இருக்கின்றன மக்கள்போராட்டங்கள்.

ஆனால், இந்த யூனியன் பிரதேசஅந்தஸ்தின் வழியாக, பொருளாதாரரீதியாகவும் வேலைவாய்ப்பு அடிப்படையிலும் காஷ்மீர் முன்னேறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருக்கிறாரே?

வேலைவாய்ப்பு இல்லாமல் அதிருப்தியில் இருக்கும் காஷ்மீரி இளைஞர்களின் பொருளாதாரம்தான் பிரிவினைக்குக் காரணம் என வெளியுலகம் நினைக்கிறது. பெரும்பான்மையானவர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் இந்தியாவுடன் பிணைப்பற்று இருப்பதற்குக் காரணம், அரசியல் ரீதியானது. அவர்களுக்குத் தேவை அரசியல் நீதிதானேதவிர, பொருளாதாரத் தீர்வு இல்லை.உள்துறை அமைச்சர் சொல்வதுபடியே நோக்கினாலும் சிறப்பு அந்தஸ்து இல்லாத இதர இந்திய மாநிலங்கள் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் எப்படி இருக்கிறார்கள்? ஏன், ஒட்டுமொத்த இந்தியாவுமே பொருளாதாரச் சரிவைதானே சந்தித்துக்கொண்டிருக்கிறது.

காஷ்மீரை மீட்டெடுக்க, இந்த முடிவு உறுதுணையாக அமையாதா?
ஜனசங்கக் கட்சியாக இருந்த காலம் தொடங்கியே, பாஜக பிரிவு 370-க்கு எதிர் நிலைப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, அதன் பன்முகத் தன்மையில் சாத்தியமில்லை என்பதை கொள்கையாகக்கொண்டிருக்கும் கட்சியின் ஆட்சியில், அதற்கு வாய்ப்பே இல்லை.அதே சமயம், காஷ்மீரி பெரும்பான்மையினர்களால் அதன் சிறுபான்மையினர்களான (சீக்கியர்கள், பண்டிட்கள்) ஒடுக்கப்பட்ட வரலாற்றை நாம் மறுக்க முடியாதே, அவர்கள் காஷ்மீருக்கு மீண்டும்திரும்புவதை 370(1) சாத்தியப்படுத் துமா?ஏற்கெனவே, இருந்தப் பிரிவு 370 காஷ்மீரி சிறுபான்மையினர்களின் நிலங்களுக்கான பாதுகாப்பையும் சேர்த்தே வழங்கி வந்துள்ளது. தற்போது, 370(1) பிரகடனப்படுத்தப் பட்டிருக்கும் சூழலில், அவர்களின் நிலங்கள்தான் கூடுதலான நெருக்கடியைச் சந்திக்கும். மேலும், காஷ்மீரிலிருந்து வெளியேறிய சிறுபான்மையினர், தங்களுக்கான வாழ்வாதாரங்களைப் பல இடங்களில் கட்டமைத்துக் கொண்டுவிட்டனர். அவர்கள், பிரச்சனைகள் சூழ்ந்த காஷ்மீருக்குத் திரும்பவேண்டிய தேவையும் இல்லை.

ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர்மக்களின் ஆபத்துதவியாகப் பார்க்கப்பட்டதற்கும் பின்னாளில், அவரை ஆதரித்த அதே மக்கள், தங்களுக்கு துரோகம் இழைத்தவராகக் கருதியதற்கும் காரணம் என்ன? இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரின் அரசியல் வரலாற்றில் என்ன நடந்தது?

அந்த வரலாற்றைப் பேச இந்தப்பேட்டிக்கான அவகாசம் போதாது. ஆனால், ஜம்மு- காஷ்மீரில் ஆயுதத்தீவிரவாதத்தை ஆதரிக்காத, அதேசமயம் மத்திய அரசின் ஒடுக்குமுறையையும் ஆதரிக்காத மக்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆயுதங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்குமிடையே அவர்களின் அரசியல் குரல் கேட்கப்படவேஇல்லை. அவர்கள், எந்தச் சூழலிலும்இந்தியாவை விட்டுக்கொடுக்காதவர்கள். அவர்களுக்கும் சேர்த்தே பிரிவு370(1) துரோகம் இழைத்திருக்கிறது.

லடாக் பகுதி மக்கள் வரவேற்றிருக்கிறார்களே... அதன் எம்.பி, ஜம்யென் செரிங், ‘இது தங்களது 70 வருடப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’ எனக் குறிப்பிட்டிருக்கிறாரே?
லடாக் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கை இது என்பது உண்மைஎன்றாலும் மற்றொரு பக்கம், கடந்தகாலத்தில் அரசியல் கட்சிகள் அந்தப்பகுதியில் பௌத்த மற்றும் இஸ்லாமியர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயன்றதை மறுக்க முடியாது. மேற்கத்திய உளவுத்துறைகளும் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இதில் ஈடுபட்டன.

உங்களது இரண்டு முக்கியப் புத்தகங்களும் தேசியவாதம் குறித்தானவை. அதனடிப்படையில், அரசியலமைப்புச் சட்டம் 370(1) மாற்றத்தையொட்டி, அதிகாரப் பகிர்வு (Decentralization) மற்றும் தேசியவாதம் குறித்தான மத்திய அரசின் நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
தற்போது, மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசு, அதிகாரப்பகிர்வு அல்லது மாநில சுயாட்சிக்கு ஆதரவான அரசு இல்லை.பாஜக, மையவாதப் பெரும்பான்மை நம்பிக்கைகளுக்கு (Centralist majoritarian) ஆதரவானவர்கள். இந்த வகையிலான அரசியல் கொள்கை பன்முகத்தன்மைகொண்ட மக்களின் ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணானது. என்னுடைய மற்றொரு புத்தகமான ‘Flavours of Nationalism’ இங்கிருக்கும் சாதிய,மத, பாலின, கலாச்சாரப் பிளவுகளால்மக்கள் சரிசமமாக அமர்ந்து அன்போடு உணவு அருந்துவதற்குக்கூட வாய்ப்பற்று இருக்கிறார்கள் என்பதைவிவாதிப்பது. ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதில்கூட அரசியல் இருப்பது, நான் அறிந்தவரையில் வேறு எந்த தேசத்திலும் கண்டதில்லை. பிரிவு 370 செயலிழக்கச் செய்யப்பட்டது, எனது இந்த வாதத்தை மேலும் வலுவாக்கியிருக்கிறது.

நன்றி: விகடன்.காம்