சீனாவிலிருந்து பால் பொருள்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய உள்ள தடை இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கான தரத்தை நிர்ணயிக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்(FSSAI) சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பால் பொருள்களான சாக்லேட், பாலாடைக்கட்டி, வெண்ணெய் ஆகியவற்றிற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு தடைவிதித்திருந்தது. இந்த தடை உத்தரவு மெலமைன் என்னும் வேதிப்பொருள் பால் பொருள்களில் கலக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொருமுறையும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக நீட்டிக்கப்பட்ட தடைக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில் தற்போது இந்த தடை நீடிக்கப்படுவதாக FSSAI தெரிவித்துள்ளது.