புதுதில்லி, நவ.30- வருகின்ற குளிர்காலத்தில், குளிர் வாட்டி வதைப்பது வழக் கத்தைவிட குறைவாகவே இருக் கும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை யில் நிலவும் வெப்பநிலை குறித்து முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள் ளது. இதில், குளிர் பருவத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட சராசரியாக ஒரு டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாக இருக்கும். வரு கின்ற மாதங்களில் தென்னிந்திய பகுதிகளில் காற்று ஈரப்பதத்தின் அளவு வழக்கத்தைவிட அதிக மாக இருக்கும். இந்தியா முழுமை யும் மேகமூட்டம் குறைவாக இருக் கும் என்பதால் சூரியக்கதிர்கள் ஊடுருவி வருவது அதிகமாக இருக்கும். பருவநிலை மாற்ற மும் வெப்பநிலை சற்று அதிக ரித்துக் காணப்படுவதற்கு காரண மாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.