tamilnadu

தனிநபர்களின் வழக்கிற்காக சிபிஐ விசாரணை உத்தரவிடக் கூடாது உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மேற்கு வங்க மாநிலம் கூர்க்கா லாந்து பிராந்திய நிர்வாகத் தின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஊழல் நடந்ததாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் டார்ஜிலிங் குடியி ருப்பாளர்கள் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கொல்கத்தா உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது. 

இதனை எதிர்த்து கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு வாதத்திற்கு பிறகு உச்சநீதிமன்ற நீதி பதிகள் பூஷன் ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,”மாநில புலனாய்வு அமைப்புக ளால் நியாயமான விசாரணை நடத்த முடி யாது என்பது உறுதியான பின்பே அந்த  வழக்குகளை மட்டுமே சிபிஐக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க முடியும். மற்றபடி தனி நபர்களின் கடிதங்கள் மற்றும் வழக்கிற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது. அதற்கென்று தனி  அதிகாரமும் கிடையாது” என உத்தர விட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.