tamilnadu

img

பிபிசிஎல்-ஐ காப்பாற்றி வரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

புதுதில்லி:
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகவும், சில்லரை விற்பனை நிறுவனமாகவும், பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் பெட் ரோலியம் கார்ப்பரேசன் (பிபிசிஎல்) விளங்குகிறது.இந்த நிறுவனத்தை எப்படியாவது, தனியாருக்குக் கொடுத்துவிட வேண்டும்என்பது மத்திய ஆட்சியாளர்களின் நீண்டகால திட்டம். குறிப்பாகச் சொன்னால், வாஜ்பாய் ஆட்சி முதற்கொண்டு இந்தமுயற்சி தொடர்கிறது. எனினும், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங் களின் போராட்டத்தால் அந்த முயற்சி பலிக்கவில்லை.

தற்போது மோடி தலைமையிலான பாஜக அரசு, 2020 மார்ச் மாதத்திற்குள் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தை தனியாருக்கு விற்று விடுவதென இலக்கு நிர்ணயித்துள்ளது. சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ளபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில், மத்திய அரசுக்கு 53.3 சதவிகித பங்குகள் இருக்கும் நிலையில், அவற்றில் சரிபாதி பங்குகளையாவது விற்றுவிடுவது; அவ்வாறு செய்துவிட்டால் ரூ. 25 ஆயிரம் கோடி வரை பணம் பார்க்க முடியும்என்று மோடி அரசு கணக்குப் போட்டுள்ளது.ஆனால், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் பங்குகள் விற்பனையை விரைவுபடுத்த முடியாததற்கு, வாஜ்பாய்ஆட்சியின்போது, உச்சநீதிமன்றம் விதித்த தடை ஒரு காரணமாக பார்க்கப் படுகிறது.வாஜ்பாய் அரசானது, பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) நிறுவனத்தையும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தையும் (எச்பிசிஎல்) தனியாருக்கு விற்க முயன்றபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2003-ஆம் ஆண்டுசெப்டம்பர் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.

அதில் “பிபிசிஎல், எச்பிசிஎல் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கு முன்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது அவசியம்,சட்டத்திருத்தமும் கொண்டுவர வேண்டும்” என்று அவர்கள் உத்தரவிட்டனர். இதனால், அன்றைய தினம் பிபிசிஎல் நிறுவனமும், எச்பிசிஎல் நிறுவனமும் வாஜ்பாய் அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றப்பட்டன.2003-இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான், மோடி அரசுக்கும் தற்போதுதடையாக மாறியிருக்கிறது. தனியார் மயத்தையும் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. பிபிசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமாக கொச்சி, மும்பை, மத்தியப்பிரதேசத்தின் பினா, அசாமின் நுமாலிகார்க் ஆகியஇடங்களில் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. நாடுமுழுவதும் 15 ஆயிரத்து 79 பெட்ரோல் நிலையங்களும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்பிஜி முகவர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.