tamilnadu

எதேச்சதிகாரத் தாக்குதல்களை நிறுத்துக! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

புதுதில்லி, அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் இடது முன்னணி அரசாங்கத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவருமான பாதல் சௌத்ரிக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டு, பாஜக அரசாங்கத்தால் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்மீது சுமத்தப்பட் டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது போதுமான சாட்சியங்களின்கீழ் தெளிவாக நிறுவப்பட்டிருக்கிறது. இவ்வழக்கு அவர் மீது அப்பட்டமாகப் போடப்பட்ட பொய் வழக்காகும். இவ்வழக்கைச் சாக்காக வைத்துக்கொண்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலு வலகம் உட்பட அனைத்து அலுவலகங்களையும் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகளை ஆராயும்போது, பாஜகவும் அதன் நிர்வாகமும் நீதி மன்ற பரிபாலன அமைப்பு முறைக்கு ஊறுவிளை விக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறது. எவ்விதமான சுதந்திரமான நீதித்துறை நுண்ணாய்வும் பாதல் சௌத்ரிமீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்திடும் என்பது நிச்சயம். எனவே பாஜக மேற்கொண்டிருக்கும் இத்தகைய அருவருக்கத்தக்க எதேச்சாதிகாரத் தாக்குதலை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும், மக்களுடன் இணைந்துநின்று கட்சி எதிர்த்துப் போராடி முறியடித்திடும் என்று அரசியல் தலை மைக்குழு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.