tamilnadu

img

குடியுரிமை பறிப்புக்கு எதிரான இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்! சிபிஎம் அரசியல் தலைமைக் குழு அழைப்பு

புதுதில்லி, ஜன.12- குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடி மக்கள் பதிவேடு-தேசிய மக்கள் தொகைப்பதி வேடு ஆகியவற்றிற்கு எதிரான இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குடியுரிமை இயக்கம்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, நாடு முழுதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அரசமைப்புச்சட்டத் தையும், மதச்சார்பின்மையையும் பாது காப்பதற்காகவும் வலுவடைந்து கொண்டி ருக்கும் இயக்கத்தினை பாராட்டி, வரவேற்கிறது. குடியுரிமைத் திருத்தச்சட்டமானது, அரச மைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள குடியுரி மைக்கான மதச்சார்பின்மை கருத்தாக்கத்தை மறுத்து, இதில் மதத்தை அடிப்படையாக அறி முகப்படுத்தியிருப்பதன் மூலம் அரித்துவீழ்த்து கிறது. குடியுரிமைத் திருத்தச்சட்டம்-தேசியக் குடிமக்கள்பதிவேடு-தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான வெகுஜன இயக்கம், மாணவர்களையும், இளைஞர்களை யும், இளம்பெண்களையும், சாமானியக் குடி மக்களையும் ஈர்த்திருப்பதிலிருந்து அவர்கள் அரசமைப்புச்சட்டத்திற்கும், அதன் ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தினைத் தெளிவாகப் பார்க்கிறார்கள் என் பது தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாக, கிளர்ச்சி இயக்கங்கள் நாள்தோறும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்துகொண்டிருக் கின்றன. அரசியல் தலைமைக்குழு, ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வளா கங்களுக்குள் அமைதியாக நடைபெற்ற கிளர்ச்சி களில் காவல்துறையினர் மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறை, அட்டூழியங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை மிகவும் வன்மை யாகக் கண்டிக்கிறது. அரசாங்கம், மக்கள் மீது போட்டுள்ள அனைத்துப் பொய்வழக்கு களையும் விலக்கிக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடு வித்திட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில், அமைதியாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிராக, மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 20 பேர் இறந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களின் வீடுகள் சூறை யாடப்பட்டிருக்கின்றன, அபராதங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் முதல மைச்சர் ஆதித்யநாத்தின் நேரடித் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசியக் குடிமக்கள் பதிவேடும் ஒன்றாக இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். 2003ஆம் ஆண்டு குடி யுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடை யாள அட்டைகள் விநியோகிப்பதற்கான)விதி களின்படி, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொகுக்கப்பட இருக்கிறது. அது, தேசியக் குடி மக்கள் பதிவேட்டிற்கான அடிப்படையாக அமைந்திடும். அரசாங்கம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகள் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. தேசியக் குடி மக்கள் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப் பதி வேட்டு நடைமுறைகள் கோடிக்கணக்கான ஏழை மக்களைக் கடுமையாகப் பாதித்திடும். குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள சமூகத்தினரையும், சிறுபான்மை இனத்தினரையும் குறிவைத்துத் தாக்கிடும். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்து கிறது. மோடி அரசாங்கம், அறிவிக்கை வெளி யிட்டிருப்பதுபோன்று தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணியைத் தொடரக்கூடாது என்றும் அது வலியுறுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ள முதலமைச் சர்கள் அனைவரும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகளையும் தங்கள் மாநிலங்க ளில் நிறுத்தி வைத்திட வேண்டும் என்று அரசி யல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது. அவ் வாறு செய்வதன்மூலம் அவர்கள், தேசியக் குடி மக்கள் பதிவேடு அமலாக்கத்தையும் நிறுத்த முடி யும். நாடு முழுதும் குடியுரிமைத்திருத்தச்சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு-தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வரும் கிளர்ச்சி இயக்கத்தை நிலைநிறுத்தி முன்னெ டுத்துச் செல்வதற்கதன வழிமுறைகளை அரசி யல் தலைமைக்குழுக் கூட்டம் விவாதித்தது. அது, இவ்வியக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வ தற்கு, நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கும் அறைகூவல் விடுக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கிடுக!
அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தகர்க்கப்பட்டும் ஐந்து மாதங்கள் கடந்தபின்ன ரும், காஷ்மீர் மக்களின் பல்வேறு உரிமை களும், சுதந்திரங்களும் பறிக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது. நூற்றுக்கணக்கான தலை வர்களும், செயற்பாட்டாளர்களும் காவல் அடைப்பின்கீழ் வைக்கப்பட்டிருக்கின்றனர். கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உணர்வினை ஏற்றுக்கொண்டு, இணையத் தொடர்பைத் திரும்பவும் அளித்திட வேண்டும் என்று, மத்திய அரசாங்கத்தை அரசியல் தலைமைக்குழு வலி யுறுத்துகிறது. இதரக் கட்டுப்பாடுகள் அனைத் தையும் ரத்து செய்திட வேண்டும். அடைப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலை வர்களை விடுவித்திட வேண்டும்.
ஜேஎன்யு மீதான தாக்குதல்
ஜனவரி 5 அன்று ஜேஎன்யு வளாகத்திற்குள் ஏபிவிபி-ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்க ளில் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 29 மாணவர்களும், ஆசி ரியர்களும் காயம் அடைந்திருக்கின்றனர். இதனை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கி றது. குண்டர்கள், கலவரத்தை நடத்திட அனு மதித்து, அங்கே வெறுமனே பார்வையாளர் களாக நின்றுகொண்டும், பின்னர் அவர்கள் வளா கத்திலிருந்து வெளியேறுவதற்கு வசதி செய்து கொடுத்தும் உள்ள தில்லி காவல்துறையின் நட வடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது. தில்லி காவல்துறையின் புலனாய்வுகள் ஒரு சார்பாக இருக்கிறது. கயவர்கள் மீது பாய்வ தற்குப் பதிலாக, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களையே குறி வைத்து விசாரணை செய்துவருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், செங்குத்தாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணங் களை ரத்து செய்யும் விதத்தில் தலையிட வேண் டும். பல்கலைக்கழகத்தின் மாண்பையே அழித்துக் கொண்டிருப்பதற்குப் பொறுப்பாக வுள்ள துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும்.
ஜனவரி 8 வேலைநிறுத்தம் 
தொழிலாளர் வர்க்கம், ஊழியர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினர் ஜனவரி 8 பொது வேலைநிறுத்த்த்தை மாபெரும் வெற்றியானதாக மாற்றியதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு பாராட்டி, வாழ்த்துகிறது. வேலைநிறுத்தம், தொழிற்சாலை கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிதித்துறை நிறுவனங்கள் மற்றும் முறைசாராத் துறைகளி லும் நடைபெற்றுள்ளன. நாடு முழுதும், பல்லா யிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சாலை மற்றும் ரயில் மறி யல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரி யர்களும் மிகவும் விரிவான அளவில் பங்கேற்றுள் ளனர். வேலைநிறுத்தம், மோடி அரசாங்கத் திற்கு, தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமான, மக்களுக்கு விரோதமான கொள்கைகளைப் பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தி ருக்கிறது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!
பணவீக்க விகிதம் உயர்ந்துகொண்டி ருப்பதற்கும், உணவுப்பொருள்களின் விலை களும் அத்தியாவசியப் பொருள்களின் விலை களும் உயர்ந்து கொண்டிருப்பதற்கும் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையை வெளிப் படுத்திக்கொள்கிறது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்ந்துகொண்டி ருக்கின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தவும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளைக் குறைத்திடவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண் டும்.
கேரளாவிற்கு எதிராகப் பாகுபாடு
மத்திய அரசாங்கம், கேரளாவின் நிதித் தேவைகளுக்கு எதிராக பாரபட்சமான முறை யில் எதிர்மறையான அணுகுமுறையோடு நடந்து கொண்டு வருகிறது. கேரளாவிற்கு 24,915 கோடி ரூபாய் 2019-20ஆம் ஆண்டுக்கான பொதுக் கடன் தொகை வழங்கிட வேண்டும். ஆனால் இதனை தன்னிச்சையாக 16,602 கோடி ரூபாய் எனக் குறைத்திருக்கிறது. டிசம்பரில் அளிக்கப்படவேண்டிய, ஜிஎஸ்டி இழப்பீட்டுக்தொகை 1600 கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை 1,215 கோடி ரூபாய் மற்றும் நெல் கொள்முத லுக்கான 1,035 கோடி ரூபாய் அளிக்கப்பட வில்லை. கேரளாவில் ஏற்பட்ட தேசியப் பேரிடர் நிவாரணத்திற்காக கேரள அரசு கோரியிருந்த 2,100 கோடி ரூபாயையும் மத்திய அரசு மறுத்தி ருக்கிறது. மத்திய அரசு இத்தகைய பாகுபாடான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. பல்வேறு கணக்குகளின்கீழ் கேரள அரசுக்கு ஒதுக்க வேண்டிய தொகைகளை அளித்திட வேண்டும். 2019இல் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலத்திற்கு, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
ஈரான் தளபதி கொல்லப்பட்டது தொடர்பாக…
பாக்தாத்தில், ஈரானிய ராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமாணி, அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தலைமைக்குழு தன் கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.  இந்நடவடிக்கையானது, சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறிய செயலாகும். 
மத்தியக்குழுக் கூட்டம்
அரசியல் தலைமைக்குழு, 2020 ஜனவரி 17-19 தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடை பெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் மீதான வரைவு அறிக்கையை விவா தித்தது.

தமிழில்: ச.வீரமணி