புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, இந்திய அரசியலமைப்பிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளது. அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவு (1)-இன் படி, இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி, சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா, நிரந்தர ஏற்பாடா; இதை நீக்குவதற்கு அதிகாரம் யாருக்கு இருக்கிறது, ஜம்மு - காஷ்மீர்சட்டப்பேரவைக்கா, அல்லது இந்திய நாடாளுமன்றத்திற்கா? என்ற கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. இதுதொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்தான், காஷ்மீரை மட்டும் ஏன்,தனித்து வைக்க வேண்டும்; அதற்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்? எல்லோரும் இந்தியர்கள் எனும் போது, பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு காஷ்மீரில் உரிமை இல்லை என்றுகூறுவதை, எப்படி ஏற்க முடியும்? என்று மேலோட்டமான வாதங்களையும் சிலர் கிளப்பி வருகின்றனர்.இவ்வாறு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதை சிலர் நியாயப்படுத்தும் வேளையில்தான், “நாகாலாந்து மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம். உங்களது 371(A) சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்படாது” என்று அம்மாநில ஆளுநர்
ரவி, அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.
விஷயம் என்னவென்றால், இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டுமல்ல. நாகாலாந்து, சிக்கிம், அசாம் துவங்கி, மோடி 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்த குஜராத், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை அமைந்திருக்கும் மகாராஷ்டிரா என மொத்தம் 10 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து - அதிகாரம் கொண்டிருக்கின்றன.ஆனால், காஷ்மீரின் அதிகாரம் பற்றி மட்டும்பேசும் பாஜகவினர், ஏனைய மாநிலங்கள் குறித்துப் பேசுவதில்லை. இந்த மாநிலங்க
ளில் நிலம் வாங்கிப் போடப் போகிறோம் என்றுசவடால் அடிப்பதில்லை. பிரிவு 370 ஜம்மு - காஷ்மீருக்கு என்றால், 371(A) நாகாலாந்து மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் சிறப்புப் பிரிவாகும். இதன்படி இந்திய நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒருசட்டமும் நாகா மக்களின் பாரம்பர்ய சட்ட விதிமுறைகளுக்கும், அவர்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கும், அவர்களது மதம்மற்றும் சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் பொருந்தாது. மத்திய அரசின் சட்டங்கள் அந்த மாநிலத்தில் அமலாக்கப்பட வேண்டிய தேவைஇருந்தால் அதன் சட்டமன்றத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்றே, சட்டப்பிரிவு 371(H) மூலம் மிசோரம் மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 371 : மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உரிமை. இந்தச் சிறப்புப் பிரிவின்படி அதன் மாநில ஆளுநர்களுக்கு விதர்பா, மராத்வாடா மற்றும் கட்ச் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் சரிசமமான வளர்ச்சியற்ற பகுதிகளில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பின் தங்கிய ஆறு மாவட்டங்களுக்கும் இதேபோல சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சட்டப்பிரிவு 371(J).பிரிவு 371(B) : அசாம் மாநிலத்துக்கு சுயாட்சிஅதிகாரம் அளித்தும் அதன் பழங்குடிகளுக்கு அந்த மாநில சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டு உரிமை அளித்தும் ஜனாதிபதியால் வழங்கப் பட்ட சிறப்பு அந்தஸ்து ஆகும். இது போன்றதேமணிப்பூர் மாநிலத்துக்கான அந்தஸ்து பிரிவு 371(C).பிரிவு 371 (D&E) : ஆந்திர மாநிலத்தின் கல்விமற்றும் வேலை வாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கான சிறப்புரிமையையும் அதன் பாதுகாப்பையும் நிலை நாட்டுவதற்காக 1974 இயற்றப்பட்ட சிறப்புச் சட்டப்பிரிவு ஆகும்.பிரிவு 371(F) : சிக்கிம் மக்களின் வெவ்வேறுபிரிவினரின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அந்த மாநிலச் சட்டப்பேரவையில் 30-க்கும்குறைவான உறுப்பினர்கள் இடம்பெறக் கூடாதுஎன்பதற்கான சிறப்பு அந்தஸ்து ஆணையாகும்.
இதேபோன்று பிரிவு 371(H) அருணாசலப் பிரதேசத்திலும், பிரிவு 371(I) கோவாவிலும், அமலில் இருக்கிறது. இந்தப் பிரிவுகளின்படி மாநிலச்சட்டங்களின் மீது ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.இவைதவிர தேசத்தின் ஒட்டுமொத்த பழங்குடிகளுக்கான சுயாட்சி அதிகாரம் அளிக்கும் பிரிவு 244(I)-ம் நாட்டில் அமலில் உள்ளது.இதன்படி குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வரையிலான பகுதிகளைப் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக (Scheduled Areas) அறிவிக்கலாம். அதனது நிர்வாகம் ஐந்தாவது அட்டவணையின் கீழ் இடம்பெறும். இந்த அதிகாரம் ஆளுநருக்கும் உண்டு. இதுவரையில் ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத்,இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசாமற்றும் தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் ஐந்தாவது அட்டவணையில் இடம்பெற்ற பழங்குடியின சிறப்புப் பகுதிகள் உள்ளன.எனவே, காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அதிகாரம் வழங்கப்படவில்லை. மாநிலங்களின் புவியியல், அரசியல் தன்மை மற்றும் அங்கு வசிக்கும்மக்களின் பிரத்யேகமான பிரச்சனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 13 மாநிலங்களில், மற்றவர்கள் யாரும் கேள்விகேட்க முடியாத வகையில் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன என்பதே உண்மையாகும்.