புதுதில்லி:
வழக்கமாக, ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால்தான் மற்றவர்கள் தாக்கப்படுவார்கள். ஆனால், ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ்-காரர் களையே ஓடஓட விரட்டித் தாக் கிய சம்பவம் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் புண்டிமாவட்டத்திலுள்ள பூங்கா ஒன்றில், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்(ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு, ஷாகா (முகாம்) ஒன்றை நடத்தியுள்ளது.அப்போது அந்த பூங்காவுக்கு வந்த சிலருக்கும், ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருகட்டத்தில்அது மோதலாக வெடித்துள்ளது.அப்போது, தகராறில் ஈடுபட்டவர்கள், ஆர்எஸ்எஸ்-காரர்களைஓட ஓட விரட்டித் தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, தங்களின் ‘ஷாகா’ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், பூங்காவையொட்டிய பகுதியைச் சேர்ந்தமுஸ்லிம்கள்தான் தாக்குதல்நடத்தியதாகவும் காவல்துறையிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.