புதுதில்லி, ஏப்.4-
திட்டக்குழுவை கலைத்தமோடி அரசு, ‘நிதி ஆயோக்’என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது. தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகளை விடஅதிகாரம் பெற்ற அமைப்பாகவும், நிதி ஆயோக்கை மோடிஅரசு முன்னிறுத்தி வருகிறது. அமிதாப் காந்தை முதன்மை செயல் அதிகாரியாக கொண்ட நிதி ஆயோக்கில், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும், உறுப்பினர்களாக வி.கே. சரஸ்வத், ரமேஷ் சந்த், பைபெக் பெப் ராய் மற்றும் வி.கே. பால் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த ‘நிதி ஆயோக்’கின் அலுவலகம், பிரதமர் அலுவலகத்தைவிட அதிகமான நிதிச்செலவில் புதுப்பிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது பிரதமர் அலுவலகப் புதுப்பித்தல் பணிக்குரூ.34 லட்சம் மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், நிதிஆயோக் அலுவலக புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.9 கோடியே 26 லட்சம் செலவிடப்பட்டுஇருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இதுதொடர் பாக கேள்வி எழுப்பப்பட்டு இருந்த நிலையில், ‘புனரமைப்பு பணிக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் செலவானது; இதுதவிர தோட்டப் பராமரிப்புக்கு மட்டும் ரூ. 34 லட்சம்,நெட்வொர்க்கிங் மற்றும் டெலிபோன் கேபிள் அமைப்புக்குரூ.52 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது’ என்று நிதி ஆயோக்கும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.