tamilnadu

img

தமிழக பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த ஒதுக்கியது ரூ.158 கோடி... வழங்கியது ரூ.5.3 கோடி...

புதுதில்லி:
தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த 2019-20-ல் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.158.65 கோடி. அதில் ரூ.5.3 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

 நாடு முழுவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் இ- கிராம்சுயராஜ் (https://egramswaraj.gov.in) என்னும் வலைதளத்தைத் தொடங்கியுள்ளது.வெளிப்படையான நிதி நிர்வாகம், முன்னேற்ற அறிக்கை, வேலை சார்ந்த கணக்கு, உருவாக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் இதில் கிடைக்கும். பஞ்சாயத்து கணக்குகளை உரிய நேரத்தில் தணிக்கை செய்யவும் இதுவழிவகுக்கிறது.பஞ்சாயத்துக்களை தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக உருவாக்கும்வகையில், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. 117 பின்தங்கிய மாவட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதே இதன் குறிக்கோளாகும். இந்தத் திட்டம்அனைத்து மாநிலங்கள்/ யூனியன்பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.இந்த வகையில், தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில், ஆண்டு செயல் திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 53.7 கோடியாகும். அதில் வழங்கப்பட்டது ரூ.36.83 கோடி. 2018-19-ல் இது முறையே, ரூ.96 கோடியாகவும், ரூ.57.6  கோடியாகவும் இருந்தது. 2019-20-ல் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.158.65 கோடி. அதில் வழங்கப்பட்டது ரூ.5.3 கோடி. 2020-ல் இதுவரை ஒதுக்கப்பட்டது ரூ. 282.78 கோடி. 14-வது நிதி ஆணையம், 2015 முதல் 2020 வரை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த 26 மாநிலங்களுக்கு ரூ.1,80,237 கோடி அளவுக்கு நிதி வழங்கியுள்ளது.2020-21 நிதியாண்டு காலத்துக்கு, 15-வது நிதிக்குழு ரூ. 60,750 கோடியை 28 மாநிலங்களின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட நிதியில் இதுவே அதிக அளவாகும்.பஞ்சாயத்துகளின் வெளிப்படைத் தன்மை, செயல்திறன், பொறுப்புடைமைஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துக்களை தேர்வு செய்து, ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.