புதுதில்லி:
இந்தியாவில் ஜூன் மாதத்தின் கடைசி15 நாளில் சில்லரை விற்பனையானது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 2019-ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூன் 15 முதல் 30 வரையிலான காலத்தில் மால்களில் இருக்கும் சில்லரை விற்பனைக் கடைகளில் 77 சதவிகித விற்பனை சரிவும், மற்ற கடைகளில் 62 சதவிகிதவிற்பனைச் சரிவும் பதிவாகியுள்ளது.இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம், (Retailers Association of India- RAI) இந்தியா முழுவதும் சிறிதும் பெரிதுமான 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வுசெய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “இந்திய பொருளாதாரச் சந்தையின்அடித்தளமே நுகர்வோர் சந்தையும், சில் லரை வர்த்தகமும்தான். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கடுமையாகப்பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக முதல் காலாண்டில் சில்லரை விற்பனைச் சந்தைசுமார் 74 சதவிகிதம் வரையில் சரிந்தது. ஆனால், ஜூன் மாதத்தின் கடைசி 15 நாட்களில் கடைகளை அதிகம் திறந்துவைத்திருந்த போதிலும் கடந்த ஆண்டைவிடவும் 67 சதவிகிதம் வர்த்தகம் சரிந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் உணவு, மளிகைப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பர்னிச்சர் ஆகியவற்றின் வர்த்தகம் சரிவில் இருந்தது. அது தற்போது மீண்டு வருகிறது.எனினும், ஜூன் 15 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான வர்த்தகத் துறைகளின் விற்பனை அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 64 முதல் 70 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது.
உணவு, ஆடை, காலணிகள் மற்றும்நகைகளின் வர்த்தக வளர்ச்சி குறைந் துள்ளது. உணவகங்கள் 71 சதவிகிதம், அழகு, ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு 69 சதவிகிதம், ஆடை, நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாகங்கள் 67 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன.ஜூன் மாதத்தில், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை மட்டும் சற்று அதிகரித்து, 19 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது.ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் பெரிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் 59 சதவிகித விற்பனை பாதிப்பையும், சிறிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் 69 சதவிகித விற்பனை பாதிப்பையும் சந்தித்துள்ளனர்.பிராந்திய வாரியாகப் பார்த்தால், மேற்கு பிராந்தியத்தில் 74 சதவிகிதம், வடக்கில் 71 சதவிகிதம், கிழக்கு மற்றும்தெற்கு பிராந்தியங்களில 62 சதவிகிதம் எனசில்லரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது” என்று ராய் அமைப்பு கூறியுள்ளது.