tamilnadu

img

சிபி எஸ் இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.10 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்தவில்91.10 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 


நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 18.27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 91.10 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக திருவனந்தபுர மண்டலத்தில் 99.85 சதவிகிதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் 13 பேர் 500க்கு 499 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.