tamilnadu

img

கொரானோவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு

அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் கொரானோ வைரஸ் சீரிய வேகத்தில் பரவி வருகிறது. தற்போது அங்கு 6 பேர் பலியாகியுள்ள நிலையில், சமீபத்தில் அகமதாபாத் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர் கொரோனாவால் இறந்தார். 

இறுதிச் சடங்கிற்காக அவர் வசித்து வந்த அஸ்டோடியா பகுதிக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. தங்களுக்கும் கொரானோ பரவிவிடும் என்ற கோரிக்கைகளுடன் அந்த பெண்ணின் உடலை புதைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இறந்த பெண்ணின் சடலத்தில் இராசாயணக் கலவைகள் பூசப்பட்டுள்ளதாகவும், சடலத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் புதைக்கப்படுவதால் கொரானோ தொற்று பரவாது என்று  போலீசார் தெரிவித்த பின்பும் அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அப்பெண்ணின் சடலம் டானிலிம்டா அருகிலுள்ள கஞ்ச் சோஹாதா  பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் சடலத்தை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனா். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதித்தனா். காவல்துறை பாதுகாப்புடன் பெண்ணின் சடலம் அந்த இடத்தில் புதைக்கப்பட்டது.