tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இட ஒதுக்கீடு என்பது இந்த தேசத்தின் சட்டம். இந்த சமூக நீதி வலுப்படுத்தப்பட வேண்டும்; பல வீனப்படுத்தக் கூடாது. அவ்வாறு பலவீனப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.

விவசாய பொருட்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை. சந்தை விலையை விட மிக அதிகமாக இருப்பதாக நிதின் கட்காரி கூறியுள்ளார். முதலில் மோடி அரசாங்கம் பசியால் துடித்தவர் களுக்கு உணவு தானியங்களை தர மறுத்த மாபாதக குற்றத்தை செய்தது.இப்பொழுது அமைச்சர் குறைந்தபட்ச ஆதார விலையை அகற்ற களம் அமைக்கிறார். குறைந்தபட்ச ஆதார விலைதான் விவசாயிகளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே பாதுகாப்பு. தேசத்தின் உணவுப்பாதுகாப்புக்கும் இது உத்தர வாதம் செய்கிறது.மக்களை பட்டினி யில் வைத்திருப்பதன் மூலம் எந்த பொருளாதார புனரமைப்பையும் உருவாக்க இயலாது.

பல கோடி மக்களின் வாழ்வை விளிம்பு நிலைக்கு தள்ளிய மோடி அரசாங்கத்தின் கேடுகெட்ட கொடூரத்தை இந்தியா ஒரு போதும் மறக்காது. வெற்று முழக்கங்கள் மூலம் இதனை திசை திருப்ப முடி யாது. ஏன் இந்த மக்களுக்கு உண வும் நிதியும் கொடுக்கப்படுவது இல்லை என்பதற்கு பதில் சொல்லி யாக வேண்டும்.