tamilnadu

img

இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாதாம்

உயர்நீதிமன்றத்தை  அணுக அறிவுறுத்தல்

சென்னை,ஜூன் 11- இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு வழங் கும் விவகாரத்தில் தலையிட முடி யாது என்று அதிர்ச்சிகரமாக கூறி யுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவப்படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு உள்ளது. நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாண வர்களுக்கு போதிய இடங்கள் கிடைப் பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இது வரை பல ஆயிரம் இடங்களை பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ள னர்.  இந்த நிலையில் முதுநிலை மருத்து வப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு  குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

குறிப்பாக இட ஒதுக்கீடு விவ காரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்கள் அனைத்தை யும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த மனுக்கள் மீதான விசார ணை ஜூன் 11 வியாழனன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஒரே காரணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வர வேற்கத்தக்கது. இருப்பினும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்பப் பெறுமாறு தமிழக அரசியல் கட்சி களுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. மேலும், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலை யிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகு மாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தலையங்கம் : 4