சித்தூர்
ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான சித்தூருக்கு அருகே உள்ள அலப்பள்ளி உள்ள 10 நபர்கள் கொண்ட 2 குடும்பத்தினர் ஊரடங்கில் பொழுது போகாமல் டிக் டாக் என அழைக்கப்படும் சமூக வலைத்தளத்தில் மூழ்கியுள்ளனர். அதில் வரும் தகவல், வீடியோ என அனைத்தையும் உண்மை என நம்பியுள்ளனர்.
இந்நிலையில், ஊமத்தங்காயை அரைத்து கசாயம் செய்து குடித்தால் கொரோனாவுக்கு நல்ல பலன் கிடைக்கும் என கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி விளையாட்டுத்தனமாக சில இளைஞர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை உண்மை என நம்பிய அந்த இரண்டு குடும்பத்தினர் தாங்களும் ஊமத்தங்காய் கசாயம் தயார் செய்து அருந்தியுள்ளனர். இந்த கசாயத்தை குடித்த சில நிமிடங்களில் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.