அம்பாலா, ஜூலை 29 பிரான்சிடம் இருந்து வாங்க பட்ட ரபேல் போர் விமானங் களில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் அம்பாலா விமான படை தளத்தில் புதனன்று தரை யிறங்கின. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந் தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயி ற்சி விமானங்கள் அடங்கும்.
முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள் திங்க ளன்று இந்தியாவுக்கு புறப் பட்டு, புதனன்று வந்துசேர்ந்தன. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவி களை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப் படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன. விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ரபேல் போர் விமானங்களை வரவேற்றார். இந்த வரவேற்பு நடைமுறை களுக்கு பின்னர் தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் ரபேல் இணைக்கப்படும்.