india

img

ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த முறைகேடு... மீண்டும் விசாரணைக்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு...

புதுதில்லி:
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த விவகாரம்தொடர்பாக பிரான்ஸ் அரசு செய்துள்ள குளறுபடிகள் குறித்து மீண்டும் விசாரணைக்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 72 ஆயிரம் கோடி ரூபாயில்  126 ரபேல்போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் 36 விமானங்களை 69 ஆயிரம் கோடிரூபாயில் வாங்குவதற்கு  மோடி தலைமையிலான பாஜக அரசு மறு ஒப்பந்தம் செய்த விவகாரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு செய்திருக்கும் குளறுபடிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று 2016 ஆம்ஆண்டு எழுந்த கோரிக்கையை நீதிமன்றம் அப்போது நிராகரித்தது.இந்த ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்குமேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம்  சமீபத்தில்செய்தி வெளியிட்டிருந்தது.இந்தியாவுக்கும் பிரான்ஸ் விமான உற்பத்தியாளர் டசால்ட்டுக்கும் இடையிலான 36 போர்விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் நடைபெற்றஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரான்ஸ் பொது வழக்கு சேவைகளின் (பி.என்.எப்) நிதிக் குற்றப்பிரிவு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மீடியா பார்ட் என்ற பிரான்ஸ்புலனாய்வு இதழ் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.மீடியா பார்ட் இதழில் வந்த ஆதாரங்களைக் கொண்டு தற்போது மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்றுகோரிக்கை முன்வைக்கப்பட்டது.இக்கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் நிறுவனத்தை நீக்கிவிட்டு டசால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட புதிய ஒப்பந்தம் குறித்துஇந்திய பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பேஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததற்கான ஆதாரம்உள்ளிட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.ஒப்பந்தம் கையெழுத்தான போது தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்,  முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே தலைமையிலான பிரான்ஸ் அரசில் நிதி அமைச்சராக இருந்தார். அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜீன்-யவ்ஸ் லே ட்ரின் இப்போது மக்ரோன் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார்.

மீடியாபார்ட் புலனாய்வு இதழ் மேற்கொண்டதொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் அதைத்தொடர்ந்து பிரான்ஸ்  தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா அளித்த புகாரைத் தொடர்ந்துஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.