india

img

6 ரபேல் போர் விமானங்கள்  ஏப்.21-ல் இந்தியாவுக்கு வருகை....

புதுதில்லி:
பிரான்சில் இருந்து 6 ரபேல் போர் விமானங்கள் ஏப்ரல் 21அன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்திய விமானப்படை தளபதிஆர்.கே.எஸ். பதாரியா ஏப்ரல் 20ஆம் தேதியன்று பிரான்சிற்கு செல்கிறார். ஏப்ரல் 23வரை அங்கு அவர் இருப்பார். பிரெஞ்சு ரபேல் படைப்பிரிவைப் பார்வையிடுகிறார். ஏப்ரல் 21 ஆம் தேதி தென்மேற்கு பிரான்சில் உள்ள மெரிக்னாக்-போர்டோ விமானநிலையத்திலிருந்து ஆறு ரபேல் போர் விமானங்களைவிமானப்படை தளபதிபதாரியா கொடியசைத்து இந்தியாவுக்கு அனுப்பிவைப்பார்.

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே 11 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்த 6  ரபேல் விமானங்கள் மேற்கு வங்க மாநிலத்தில்உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதன்மூலம் இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக உயரும். மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.